வடமத்திய மாகாண முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குவதற்குத் தயாராகவே இருக்கின்றேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பி. ஹரிஷன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
யுகதனவி ஒப்பந்த விவகாரத்தால் அரசுக்குள் மோதல் ஆரம்பமாகியுள்ளது. பங்காளிக் கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.
இந்நிலையில், மக்களும் அரசுக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே உள்ளனர். தேர்தலொன்று நடத்தப்படுமானால் இது தெரியவரும்.
வடமத்திய மாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்க நானும் தயார். மக்கள் யார் பக்கம் என்பதை நிரூபித்துக் காட்டுவேன் என மேலும் தெரிவித்துள்ளார்.