மட்டக்களப்பில் பெண் ஒருவர் கைது!

வாழைச்சேனையில், போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.பண்டார தெரிவித்தார்.

மட்டக்களப்பு – வாழைச்சேனை, பன்சலை வீதியில் இன்று (31) அதிகாலை பொலிசார் சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி பெண்ணிடமிருந்து, 09 போதைப்பொருள் மாத்திரைகள் மற்றும் 386 மில்லிகிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *