முடி உதிர்வுக்கு காரணமான 5 உடல் நல பிரச்சனைகள், இனி கவனமா இருங்க!

முடி உதிர்தல் என்பது இயல்பானது. ஆனால் வெகு தீவிரமாக முடி உதிர்தல் எதிர்கொள்வது அடிப்படை நிலை உடல்நல பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம். அப்படி உங்கள் கூந்தலை மெலிய செய்யும் முக்கியமான விஷயங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

ஆண் அல்லது பெண் முறை வழுக்கையில் மரபணு முக்கிய பங்கு வகிக்கின்றன. இது வயதான பிறகு உண்டாகும் பிரச்சனை என்றாலும் பெண்ணாக இருந்தால் தலைமுடி ஒட்டுமொத்தமாக மெலிந்து போகலாம். ஆனால் இந்த நிலை முடியை வழுக்கையை உண்டாக்க வாய்ப்பில்லை.

ஆணாக இருந்தால் உங்கள் தலைமுடியின் மேற்பகுதி மெலிந்து போகலாம். அதோடு வழுக்கையை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். வழுக்கை பிரச்சனை என்பது பெண்களை விட ஆண்கள் அதிகம் எதிர்கொள்வதில் மரபணுவும் முக்கிய பங்கு வகிக்கிறது.

சில நிகழ்வுகள் தலைமுடியை மெல்லியதாக மாற்றும். சில நேரங்களில் மன அழுத்தம் அதிகமான பிறகு சில மாதங்களில் உங்கள் தலைமுடி தானாகவே வளரும். மான் அழுத்தத்தல் உண்டாகும் முடி உதிர்தலுக்கு காரணங்களாக சொல்லப்படுவது இதுதான்

பிரசவம்

அறுவை சிகிச்சை’

நோய் அல்லது காய்ச்சல்

நேசிப்பவரை இழப்பது உள்ளிட்ட காரணங்களால் மன அழுத்தமும் அதனால் முடி உதிர்வும் உண்டாகலாம்.

தைராய்டு வளர்சிதை மாற்றம், வளர்ச்சி மற்றும் பல உடல் செயல்பாடுகளை ஒழுங்குப்படுத்துகிறது. தைராய்டு சுரப்பு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் அது முடி உதிர்விலும் ஏற்படுத்தும்.

தைராய்டு பிரச்சனையை கொண்டவர்களில் ஆண்களை காட்டிலும் பெண்கள் அதிகமாக எதிர்கொள்கிறார்கள். பெண்கள் அதிக முடி எடை இழப்பை எதிர்கொள்ள காரணம் தைராய்டு பிரச்சனை என்று சொல்லலாம்.

உணவில் இருந்து சில ஊட்டச்சத்துக்கள் போதுமானதாக இல்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். ஊட்டச்சத்து குறைபாடுகள் முடி உதிர்தலுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக இருக்கலாம். குறிப்பாக இந்த குறைபாடுகளில் புரதங்கள் போதுமானதாக கிடைக்காதது. மேலும் குறைந்த அளவு இரும்புச்சத்து அல்லது வைட்டமின் டி குறைபாடால் இருக்கலாம்.

சில உணவுகள் உங்கள் முடி இழப்பு தடுக்க உதவும். முடி உதிர்வுக்கு ஏற்ற உணவுகள் என்னவென்று பார்க்கலாம்.

சால்மன் மீன்

கிரேக்க தயிர்

மெலிந்த கோழி இறைச்சி

ஒய்ஸ்டர்ஸ்

​அதிகப்படியான சிகை அலங்காரங்கள்

முடி இழப்பை உண்டாக்குவதில் போனிடெயில்கள், ஜடைகள், முடியை சிக்கலாக்கும் அலங்காரங்கள் போன்றவையும் முடிக்கு பயன்படுத்தும் வெப்பநிலை கருவிகளும் கூட அளவுக்கதிகமான முடி இழப்பை உண்டாக்கும்.

அமெரிக்கன் ஆஃப் டெர்மட்டாலஜி அசோசியேஷனின் 2018 ஆம் ஆண்டு கட்டுரையின் படி, முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும் சிகை அலங்காரங்கள் குறித்த கட்டுரையில் 2 முதல் 3 மாதங்களில் கூந்தலை தளர்த்தி மாற்றுவதன் மூலம் முடி உதிர்தல் சேதத்தை தடுக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *