டமாஸ்கஸ் புறநகர் பகுதிகளை நோக்கி இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் – சிரியா

தலைநகர் டமாஸ்கஸின் புறநகர்ப் பகுதிகளை நோக்கி இஸ்ரேலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் சிரியாவின் வான் பாதுகாப்புப் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டமாஸ்கஸைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் உள்ள தளங்களை குறிவைத்து தாக்கப்பட்ட ஏவுகணைகள் சிலவற்றை அழித்ததாக சிரிய வான் பாதுகாப்பு இராணுவ அறிக்கை தெரிவிக்கின்றது.

இரண்டு வீரர்கள் காயமடைந்தனர் மற்றும் சில பொருள் இழப்புகள் ஏற்பட்டதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் லெபனானுக்குச் செல்லும் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளின் கப்பலை இலக்காகக் கொண்டு இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

தாக்கப்பட்ட பகுதிகளில் லெபனானின் ஹெஸ்பொல்லா குழுவிற்கான ஆயுதக் கிடங்குகள் மற்றும் சிரிய இராணுவம் மற்றும் ஈரான் ஆதரவு போராளிகளின் நிலைகள் உள்ளன என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *