ஞானசார தேரருக்குஇ இஸ்லாத்தின் சத்தியத்தை இதுவரை காலமும் முஸ்லிம் சமூகத்தைச் சோ்ந்த புத்திஜீவிகள் எவரும் சுட்டிக்காட்டவில்லை என கொழும்பு மாநரகசபையின் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு உறுப்பினர் கலீல் உல் ரஹ்மான் தெரிவித்தார்.
ஞானசார தேரர் தலைமையிலான செயலணியில் அங்கம் வகிப்பது தொடர்பில் கருத்துரைத்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
நானும், அரசியல் செயல்பாட்டாளா், ஹசீஸ் நிஸார்தீனும், ஜனாதிபதி செயலணி ஒன்றுக்கு பாிந்துரைக்கப்பட்ட போதிலும், அது ஞானசார தேரரின் தலைமையிலான செயலணிக்காகவே என்பது குறித்து எமக்குத் தெரிந்திருக்கவில்லை.
இந்த செயலணிக்கு யாா் தலைவர் என்ற விடயத்தைக் காட்டிலும் செயலணியின் நோக்கத்தை புாிந்துகொண்டு அதில் தொடா்ந்தும் அங்கம் வகிப்பதா? இல்லையா? என்பது தொடா்பில் முடிவெடுப்போம்.
தடைசெய்யப்பட்ட அமைப்பு ஒன்றின் குா்ஆன் மொழிப்பெயா்ப்பை வைத்துக்கொண்டு ஞானசார தேரா், இறைவனை ‘சூழ்ச்சியாளா்’ என்று கூறுவது தவறு.
எனினும் ஞானசார தேரருக்குஇ இஸ்லாத்தின் சத்தியத்தை இதுவரை காலமும் முஸ்லிம் சமூகத்தைச் சோ்ந்த புத்திஜீவிகள் எவரும் சுட்டிக்காட்டவில்லை.
அதேநேரம் கொரோனா ஜனாஸாக்களை அடக்கம் செய்யும் விடயத்தில் அவா் முஸ்லிம்களுக்கு சாா்பான கருத்தை வெளிப்படுத்தியிருந்தாா்.
எனவே எதிா்வாத அரசியலை தவிா்த்து யதாா்த்த அரசியலுக்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் முன்வரவேண்டும் என்று கலில் உல் ரஹ்மான் கோாியுள்ளாா்.
ஏற்கனவே முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக செயற்பட்டவா்களான விடுதலைப்புலிகள் மற்றும் சம்பிக்க ரணவக்க உட்பட்டவா்களுடன் முஸ்லிம் அரசியல்வாதிகள் இணக்க நிலைப்பாட்டில் செயற்படுகின்ற போக்கையேஇ தாம்இ ஞானசார தேரரின் விடயத்தில் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்த செயலணியில் தம்மையும் இணைத்துக்கொள்ளுமாறு தமிழ்ச் சமூகம் யதாா்த்த நிலையை உணா்ந்து கோருகின்றது.
ஆனால்இ அதில் இருந்து விலகுமாறு முஸ்லிம் சமூகத்தின் சிலா் கோருவதாகவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.