காத்தான்குடியைச் சேர்ந்த விளக்கமறியல் கைதியொருவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்த குறித்த கைதி, கடந்த வியாழக்கிழமை (28) காலை மரணமடைந்துள்ளார்.
மேலும் தெரியவருகையில்,
56 வயதான மேற்படி விளக்க மறியல் கைதி, புதிய காத்தான்குடி-இரண்டாம் குறிச்சியைச் சேர்ந்தவர்.
சுகயீனமுற்றிருந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும், சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.
கைதியின் சடலம், அவரது உறவினர்களிடம் வெள்ளிக்கிழமை (29) கையளிக்கப்பட்டுள்ளது.