மக்களை ஒடுக்குகின்ற முதலாளித்துவ வர்த்தகத்துக்கு எதிராக போராடுவோம்! சந்திரசேகரன் தெரிவிப்பு

எங்களை ஒடுக்குகின்ற முதலாளித்துவ வர்த்தகத்துக்கு எதிராக போராட வேண்டும். புளொட் அமைப்பின் ஆரம்பகால அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கான புதிய புரட்சிகரம் ஒட்டிய இயக்கமாக மாற வேண்டும், அந்த மாற்றத்தினை நோக்கி நாம் அனைவரும் நகர வேண்டும் என ஜே.வி.பியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகரன் தெரிவித்தார்.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் பத்தாவது தேசிய மாநாடு இன்றைய தினம் யாழ்ப்பாணம் இடம்பெற்றிருந்தது.

அதில் கலந்துகொண்டு அவர் மேலும் தெரிவித்ததாவது,

புளொட் அமைப்பானது ஒரு காலத்தில் சோசலிச போராட்ட கருத்துக்களை முன்னெடுத்தவர்களில் முன்னிலையில் இருந்தது.

நாட்டின் எந்த பகுதி என்றாலும் ஒரு நெருக்கடியான காலத்தில் இன்று வரை எல்லா வழிகளிலும் சீரழிந்து கொண்டிருக்கின்றன. ஜாதி பிரச்சனைகள் கூட இன்றும் எங்கேயோ ஒரு இடத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவற்றை எல்லாம் ஒடுக்கி விட்டு இந்த நாட்டில் இருக்கின்றவர்கள் மனிதர்கள், மனித சமூகமாக வாழ வேண்டும் என்று போராடிய இயக்கங்களில் ஒன்று இந்த புளொட் அமைப்பு என்பது ஒரு மிகையாகாது.

அந்தவகையில் போராடி இன்று தோல்வியடைந்திருக்கின்றோம். தோல்வியடைந்த மக்களை வெற்றியை நோக்கி நகர்த்துவது எப்படி? என்று பார்க்கும் போது நாம் இழந்த தோழர்களுடைய அனுபவங்களை, பாடங்களை திரும்பிப் பார்க்க வேண்டும்.

தத்துவார்த்த ரீதியாக, பொருளாதார ரீதியாக போன்ற பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாகவும் கதைக்கு கதை பரிமாறிக் கொண்டவர்கள், இவ்வாறான ஆளுமையுடைய அமைப்பு தான் இந்த புளொட் அமைப்பு.

தற்போதைய கால கட்டத்தில் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டிருக்கின்றோம். இன்று நாம் 59 பில்லியன் டொலர் கடனாளிகளாக இருக்கின்றோம், இந்த நிலையில் மீண்டும் கடன் வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.

ஆசிரிய சங்கத்தின் போராட்டத்தின் போது மிக அர்ப்பணிப்போடு செயல்பட்ட ஜோசப் ஸ்டார்லின் கைது செய்யப்பட்டு சிறையில் வைத்திருக்கிறார்கள், போராட்டக்காரர்களா கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

எங்களை ஒடுக்குகின்ற முதலாளித்துவ வர்த்தகத்துக்கு எதிராக போராட வேண்டும். புளொட் அமைப்பின் ஆரம்பகால அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கான புதிய புரட்சிகரம் ஒட்டிய இயக்கமாக மாற வேண்டும், அந்த மாற்றத்தினை நோக்கி நாம் அனைவரும் நகர வேண்டும். – என்றார் .

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *