
சமத்துவ மக்கள் நல ஒன்றியத்தின் ஊடாக இறக்காமத்திலும் வீடு கையளிப்பு!
-கேதீஸ்-
பல்வேறு மனிதநேயப்பணிகளை பரவலாக முன்னெடுத்துவரும் சமத்துவ மக்கள் நல ஒன்றியததின் ஊடாக சுவிஸ் நாட்டில் வசிக்கும் இரா.விஜயகுமாரன் (விஜி) முயற்சியால் இறக்காமம் கிராமத்தில் இஸ்லாமிய குடும்பத்துக்கு வீடு ஒன்று நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கப்பட்டது.
சுமத்துவ மக்கள் நல ஒன்றியத்தின் ஐரோப்பாவின் இணைப்பாளரான கல்முனை பாண்டிருப்பைச் சேர்ந்த இராசலிங்கம் விஜயகுமாரன் தொடர்ச்சியாக பல சமூகப்பணிகளை முன்னெடுத்து வருகின்றார்.
இவரின் முயற்சியால் வடக்கு கிழக்கில் இதுவரை பல அமைப்புக்கள் ஊடாக 10 வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஆறு வீடுகள் அவரது சொந்த நிதி என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இவரின் சேவையை பாhத்து இவரது நண்பர்களும் இவரின் ஊடாக நான்கு வீடுகளை இவரது பகுதிப்பங்களிப்புடன் அமைத்துள்ளனர். இவ்வாறே குறித்த இறக்காமம் குடும்பத்துக்கான வீடு விஜயகுமாரனுடன் பணியாற்றும் கோசோவோ நாட்டு பெண்மணியான ஊநஎளநசந டீநமiஅ Pநஉயமெi என்பவரின் நிதிப்பங்களிபபில் நிர்மானிக்கப்பட்டுள்ளது. அஷரப் ரீ.வி எனும் சமூக வலையத்ததளத்தில் பதிவிப்பட்ட தேடல் எனும் தொகுப்பில் இருந்து இந்த குடும்பத்துககான உதவி அடையாளம் காணப்பட்டிருந்தது.
சமத்துவ மக்கள் நல ஒன்றியத்தின் தலைவர் க.அருள்ராஜா தலைமையில் இடம்பெற்ற வீடு கையளிக்கும் நிகழ்வில் அதிதிகளாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் குணசிங்கம் சுகுணன் ஆகியோரும் மேலும் பலரும் பங்குபற்றயிருந்தனர்.
குறித்த வேலைத்திட்டத்தில் முக்கிய பங்காற்றிய சமத்து மக்கள் நல ஒன்றியத்தின் உறுப்பினர்களும் அதிகளால் கௌரவிக்கப்பட்டிருந்தனர்.
