
இந்தியா,ஓக 11
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 169-வது படம் ஜெயிலர். இதில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மேலும்,ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஜெயிலர் சமீபத்தில் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 15-ஆம் தேதி அல்லது 22 -ஆம் தேதிகளில் தொடங்கப்படும் என ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக தமன்னா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.