ஜூலி சங்- ஹரின் பெர்னாண்டோ சந்திப்பு

கொழும்பு, ஓக. 13:

சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது தொடர்பில் உடனடி, நீண்டகாலத் திட்டங்கள் தொடர்பாக அமைச்சருடன் கலந்துரையாடியதாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஜூலி சங் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் இயற்கை அழகையும் கண்கவர் கலாச்சாரத்தையும் அதிகமான அமெரிக்கர்களுடன் பகிர்ந்து கொள்வதில் தான் ஆர்வமாக உள்ளதாக தனது டிவிட்டர் பக்கத்தில் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு சுற்றுலா முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *