
கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுகுணன்.
கல்முனைப்பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவிற்குட்பட்ட தனியார்க் கல்வி நிலையங்கள் மீளத் திறக்கப்படும் பட்சத்தில் ஆசிரியர்களும் மாணவர்களும் சுகாதார நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டுமென கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ. சுகுணன் தெரிவித்தார்.
கல்வி நிலையத்தில் கட்டாயம் ஒரு மீற்றர் சமூக இடைவெளி பேணப்பட வேண்டும் எனவும் அதன் அளவைப் பொறுத்து மாணவர்களை அனுமதிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அடிக்கடி கை கழுவவதோடு மலசலகூடங்களை துப்பரவாக வைத்திருப்பதோடு போதியளவு நீர் மற்றும் சவர்க்காரம் வைக்கப்பட வேண்டும் எனவும் அறிவித்துள்ளார். தொற்று பரவி வருகின்ற இக்கால கட்டத்தில் சுகாதாரப் பகுதியினர் திடீர் பரிடீசாதனைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறினார்.
கல்வி நிலையத்தின் உரிமையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இறுக்கமான சுகாதார நடவடிக்கைகளைப் பின்பற்றி செயற்பட வேண்டுமெனவும் கேட்டுள்ளார்.
சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத தனியார் கல்வி நிலையங்கள் மூடப்படுமெனவும் அதன் உரிமையாளர்களுக்கெதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
