மன்னாரில் பெரும்போக பயிர்ச் செய்கையில் 5,700 ஏக்கர் விவசாயம் பாதிப்பு!

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக 2021 ஆம் 2022 ஆம் ஆண்டிற்கான பெரும்போக பயிர்ச் செய்கையில், சுமார் 5,700 ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 2,580 ஏக்கர் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் 990 ஏக்கர், நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் 180 ஏக்கர் மற்றும் மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவில் 560 விவசாயம் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் மொத்தமாக 5,700 ஏக்கர் வயல் நிலங்கள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளது. வட மாகாணத்தின் 2 ஆவது மிக பெரிய குளமான முருங்கன் கட்டுக்கரை குளத்தில் 11.5 அடி நீர் காணப்படுவதோடு, தற்போது நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

கட்டுக்கரை குளத்தின் மேலதிக நீர் வெளியேறும் பகுதி ஊடாக 4 இஞ்சி அளவில் நீர் வெளியேறுவதாகவும் மன்னார் மாவட்ட கமநல திணைக்களத்தின் உதவி ஆணையாளர் ஏ.மெரின் குமார் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *