சீரற்ற காலநிலை காரணமாக முந்தல் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொத்தாந்தீவு பகுதியில் திங்கட்கிழமை மாலை காணாமல் போன குடும்பஸ்தர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
55 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சில தினங்களாக தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.
இந்நிலையில், கொத்தாந்தீவு பகுதியிலுள்ள இறால் பண்ணை ஒன்றில் வேலைக்கு சென்று வெள்ளநீருக்குள் சிக்கிக் கொண்ட உறவினர் ஒருவரை அழைத்துச் செல்வதற்காக வீட்டிலிருந்து சென்ற குடும்பஸ்தர் ஒருவர் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயிருந்தார்.
இவ்வாறு காணாமல் போன குடும்பஸ்தரை மீனவர்கள், பொதுமக்கள் இணைந்து தேடி வந்த நிலையில், இன்று அதே பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.