சீரற்ற காலநிலை காரணமாக மூடப்பட்ட, யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகள் நாளை திறக்கப்படும் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அறிவித்துள்ளார்.
யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், யாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் தற்பொழுது சீரான வானிலை நிலவுகின்றது.
எனினும், வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை நீக்கப்படவில்லை.
நேற்றுமுன்தினம் 240 மில்லி மீற்றருக்கு அதிகளவான மழை பெய்துள்ளது. அத்துடன், தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
இதனால், 9 ஆயிரத்து 105 குடும்பங்களை சேர்ந்த 30 ஆயிரத்து 308 பேர் பாதிக்கப்பட்டதாக அறிக்கையிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.