புத்தளம், நுரைச்சோலை பகுதியில், வீதியில் பயணித்த முச்சக்கர வண்டியின் மீது பாரிய மரமொன்று முறிந்து விழுந்துள்ளது.
இவ் விபத்தில், முச்சக்கர வண்டியின் சாரதி தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுமார் 100 ஆண்டுகள் பழைமையான மாமரமொன்றே இவ்வாறு முறிந்து விழுந்துள்ளது. இந்த அனர்த்தத்தில் முச்சக்கரவண்டி பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
மரம் முறிந்து விழும்போது முச்சக்கரவண்டியிலிருந்த சாரதி வெளியே பாய்ந்து உயிர்தப்பியுள்ளார் என தெரியவருகிறது.