வாட்ஸ்அப்பில் இப்படி எல்லாம் ஒரு ஆப்ஷன் இருக்குனு நமக்கு தெரியாம போச்சே..!

உலக அளவில் 2 பில்லியன் யூசர்களுக்கு மேல் கொண்டுள்ள வாட்ஸ்அப் ஆப் அவ்வப்போது சில சிறப்பான அப்டேட்களை விடுவது வழக்கம்.

சில மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கை சர்ச்சையினால் பல வாட்ஸ்ஆப் யூசர்கள் டெலிகிராம், சிக்னல் போன்ற பிற மெசேஜிங் செயலிகளுக்கு மாறி விட்டனர். இதனால் மெசேஜிங் செயலிகளுக்குள் கடும் போட்டி நிலவி வருகிறது.

இவற்றை முந்த விடாமல் தனது இடத்தை தக்க வைக்க வாட்ஸ்அப் செயலியில் தலைமை நிறுவனமான ஃபேஸ்புக் (தற்போது ‘மெட்டா’ என பெயரிடப்பட்டுள்ளது) சூப்பர் அப்டேட்களை தந்து வருகிறது.

மெசேஜை ஒரு முறை பார்க்கும் வசதி, மெசேஜ் தானாக மறைதல், வீடியோ கால்களில் சேர்க்கப்பட்டுள்ள ‘Join now’ பட்டன் வசதி போன்ற பல அப்டேட்கள் வாட்ஸ்அப் யூசர்களுக்கு விருந்தாக அமைந்தது.

அந்த வகையில் மேலும் 3 சிறப்பான அப்டேட்களை வாட்ஸ்அப் தற்போது அறிமுகம் செய்துள்ளது. அதில் வாட்ஸ்அப் வெப் போட்டோ எடிட்டர், ஸ்டிக்கர் பரிந்துரைகள் மற்றும் லிங்க் பிரிவியூவ் போன்றவை அடங்கும். இது பற்றி பல யூசர்களுக்கு தெரியாமலே உள்ளது.

நமக்கு வரும் மெசேஜ்களை ஒவ்வொரு முறையும் நமது ஸ்மார்ட் போனை திறந்து பார்க்க வேண்டிய தேவையை மாற்றியதே இந்த வாட்ஸ்அப் வெப் தான்.

தொடக்கத்தில் இதில் வரும் மெசேஜ்களை பார்க்கவும், அதற்கு பதிலளிக்கும் வசதி மட்டுமே இருந்தது. ஆனால், இனி நீங்கள் நினைக்கும் பலவற்றையும் உங்கள் வாட்ஸ்அப் வெப் மூலம் எளிதாக செய்யலாம்.
குறிப்பாக நீங்கள் யாருக்காவது போட்டோவை எடிட் செய்து அனுப்ப வேண்டும் என்றால், இனி உங்களின் மொபைலில் வாட்ஸ்அப்பை திறந்து எடிட் செய்ய வேண்டிய அவசியமில்லை.

உங்கள் கணினியில் பயன்படுத்தும் வாட்ஸ்அப் வெப் மூலம் போட்டோக்களை எடிட் செய்ய ‘வாட்ஸ்அப் வெப் போட்டோ எடிட்டர்’ வசதி இந்த அப்டேட்டில் தரப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் இருந்து நீங்கள் வாட்ஸ்அப்பிற்கு பகிரும் எந்த லிங்க்காக இருந்தாலும் இனி அவற்றிற்கு பிரிவியூ காட்டப்படும். குறிப்பாக செய்திகள், ட்விட்டர் பதிவுகள், வீடியோ லிங்க் போன்றவற்றை பகிரும்போது அதில் விளக்கமாக பிரிவியூ காட்டப்படும்.

இதன்மூலம் யார் உங்களுக்கு லிங்க் அனுப்பினாலும், அது எதை பற்றியது என உங்களால் தெளிவாக அறிய முடியும்.

நமது உணர்ச்சிகளை எளிதில் பிறருக்கு உணர்த்த கூடியவை இந்த ஸ்டிக்கர்கள் தான். பிறருடன் சாட் செய்யும்போது ஸ்டிக்கர் பயன்படுத்தவில்லை என்றால் நிச்சயம் நமக்கு சலிப்பு ஏற்பட்டு விடும்.

எனவே இனி உங்களின் உணர்ச்சிகள் என்னவென்று டைப் செய்தால் போதும், உங்களுக்கான வாட்ஸ்ஆப் ஸ்டிக்கர்கள் பரிந்துரையாக வந்து குவிந்து விடும்.

இனி இந்த அப்டேட்களை கொண்டு வாட்ஸ்அப்பை இன்னும் மகிழ்வாக பயன்படுத்துங்கள். ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் ஆகிய இரண்டிலும் இந்த புதிய அப்டேட்கள் செயல்படும் என வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *