
12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப் சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலை 1050 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய லாப் சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் புதிய விலை 5,800 ரூபா ஆகும்.
இதேவேளை, 5 கிலோ கிராம் கொள்கலன் 2320 ரூபாவாகவும், 2 கிலோ கிராம் கொள்கலன் 928 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது.
இன்று முதல் குறித்த விலை குறைப்புகள் நடைமுறைக்கு வரும் என லாஃப் நிறுவனம் அறிவித்துள்ளது.