10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி

இந்தியா,ஓக 18

இந்தியா மற்றும் Zimbabwe அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

ஸிம்பாவேயின் Harare சர்வதேச விளையாட்டரங்கில் நடைற்ற குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது.

இதன்படி போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய Zimbabwe அணி 40.3 ஓவர்கள் நிறைவில் 189 ஓட்டங்களை பெற்று ககல விக்கெட்டுகளையும் இழந்தது.

பந்துவீச்சில் இந்திய அணியின் Deepak Chahar , Prasidh Krishna மற்றும் Axar Patel ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

Zimbabwe அணியின் துடுப்பாட்டத்தின் சார்பில் Regis Chakabva அதிகபட்சமாக 35 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இதன்படி 190 எனும் வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 30 தசம் 5 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி 192 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *