வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீது வெட்டப்பட்ட தென்னை மரம் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.
அனுராதபுரம், நரியன்குளம் சந்தி, மிகிந்தலை வீதியில், ஒப்பந்த அடிப்படையில் மின் இணைப்பு கம்பிகளுக்கு ஆபத்தான மரங்களை வெட்டி அகற்றிக் கொண்டிருந்த போது, இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் மற்றும் பின்னால் அமர்ந்து சென்ற நபர் ஆகியோர் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும், பின்னால் அமர்ந்து சென்ற நபர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
பஹலகம, உஸ்வௌ பிரதேசத்தை சேர்ந்த 71 வயதுடைய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.
இதுதொடர்பில் 18 மற்றும் 30 வயதுடைய இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அனுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.