
அநுரவின் கேள்விக்கு மஹிந்த பதில்
இலங்கையில் புதிய அரசமைப்பை உருவாக்கவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழு இந்த வருடம் இறுதிக்குள் இறுதி வரைவை சமர்ப்பிக்கும் என எதிர்ப்பாக்கின்றோம்.
-இவ்வாறு மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
புதிய அரசியலமைப்பிற்கான வேலைத்திட்டங்கள் தற்போது இறுதிக்கட்டத்தில் இருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் நேற்று பிரதமரிடத்திலான கேள்வி நேரத்தின் போது ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக எம்.பியால் எழுப்பப்பட்ட கேள்விக்க பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாற கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
அரசு தனது கொள்கையறிக்கையில் உறுதியளித்தபடி புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கு அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழு இவ்வருட இறுதிக்குள் தமது இறுதி வரவை சமர்ப்பிக்கும் . ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையிலான குழுவில் ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வா ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்த்தன, ஜனாதிபதி சட்டத்தரணி நவீன் மாரப்பன, பேராசிரியர் நசீமா கமர்தீன், கலாநிதி ஏ.சர்வேஸ்வரன் மற்றும் பேராசிரியர் ஜி.எச். பீரிஸ் அடங்குகின்றனர் என்றார்.
