இந்தியாவில் இருந்து இலங்கை வடக்கு கடற்கரையில் கரையொதுங்கும் ஆற்றுவாழை தாவரங்களை பசுந்தாள் உரமாக தயாரிக்கப்பட்டு செறிவான உரமாக பயன்படுத்தமுடியும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
சீரற்ற காலநிலை காரணமாக வடக்கு கடற்கரையில் அண்மைய நாட்களாக தாவரங்கள் பல கரையொதுங்கி வருகின்றன.
குறிப்பாக யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு கடற்கரையில் பல கிலோமீற்றர் தூரத்துக்கு இவ்வாறு தாவரங்கள் கரையொதுங்கியுள்ளன.
குறித்த தாவரங்கள் தமிழ்நாட்டில் உள்ள ஆறுகளில் காணப்படும் ஆற்றுவாழை தாவரம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
கரை ஒதுங்கியுள்ள ஆற்றுவாழை தாவர கழிவுகள் பல ஒன்றாகச் சேர்க்கப்பட்டு, மக்கவிடப்பட்டு அல்லது சிதைமாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டும் இயற்கை உரமாகப் பயிர்களுக்கு அளிக்கப்படலாம் என விவாசாயிகள் தெரிவிக்கின்றனர்.
வேந்தர் பதவியை வகிக்கும் தகுதி எனக்கு இல்லை! முருத்தெட்டுவே தேரர்