திருகோணமலை, சூரியபுர பிரதேசத்தில் யானைகளின் அட்டகாசத்தைக் கட்டுப்படுத்த கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் பிரதேச மக்களால் முன்னெடுக்கப்பட்டது.
இக்கவனயீர்ப்பு சூரியபுர பொலிஸ் நிலையத்தின் முன்னால் இன்று நடைபெற்றது.
இதில் ஐம்பதிற்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டதோடு, காட்டு யானைகளின் பிரச்சினைகளை கட்டுப்படுத்துமாறு கோரி தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
யானைகளின் பிரச்சினையை கட்டுப்படுத்து, மனித உயிர்களை பாதுகார், யானை வேலிகளை அமைத்துதா போன்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளையும் ஏந்தியவாறு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.