இலங்கையில் இரண்டாவதாக நடந்த அபூர்வ சத்திரசிகிச்சை!

பதுளை பொது வைத்தியசாலையில், முழுமையாக மயக்கமடைய செய்யாமல் பெண்ணுடன் உரையாடிக்கொண்டே மூளை கட்டியொன்று அகற்றப்பட்டது.

இவ்வாறு நரம்பியல் கோளாறால் பாதிக்கப்பட்ட 44 வயது பெண்ணுக்கே அபூர்வ சத்திரசிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் தெரியவருகையில்,

நுவரெலியா பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு பதுளை வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

இதன் போது அவரது தலையில் 3 – 4 சென்றிமீற்றர் அளவு பெரிய கட்டி ஒன்று வளர்ந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக இந்த கட்டிக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலைமை காணப்பட்டுள்ளது.

4 மணித்தியாலங்கள் இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது நோயாளி மிகவும் ஆரோக்கியமான உடல் நிலையில் இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான சத்திரசிகிச்சை இலங்கையில் இடம்பெற்ற இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இதற்கு முன்னர் அநுராதபுரம் வைத்தியசாலையில் நோயாளியை முழுமையாக மயக்கமடைய செய்யாமல் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *