திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மெடியாவ பகுதியில் இறந்த நிலையில் யானைகளின் இரு உடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரு ஆண் யானைகளின் உடலமே இன்று மீட்கப்பட்டுள்ளது.
சுமார்; 20 வயது மதிக்கத்தக்க இவ் யானைகளில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. மின்சார யானை வேலியில் சிக்குண்டு உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
குறித்த இடத்துக்கு வின விலங்கு ஜீவராசி திணைக்களத்தினர் சென்று பிரேத பரிசோதனை மேற்கொள்ளவுள்ளனர்.
இதுதொடர்பில் மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
