வடக்கி்ல் பறிக்கப்படுகின்ற காணிகள் மீண்டும் தமிழ் மக்களுக்கு தொடா்ந்தும் வழங்கப்படாமல் இருக்கின்றன என யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினா் எஸ் ஸ்ரீதரன் தொிவித்துள்ளாா்.
இதன்காரணமாக தமது சொந்தக்காணிகளில் மக்கள் மீள்குடியேறமுடியாது நிலைக்கு உள்ளாகியுள்ளதாக மேலும் குறிப்பிட்டார்.
மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்தில் மாத்திரம் 14ஆயிரம் போ் காணிகள் இன்றி உள்ளனா்.
கிளிநொச்சியில் 4000 போ் காணிகள் இன்றி உள்ளனா்.
எனினும் முல்லைத்தீவில் வடக்கில் சிங்கள மக்களுக்கு காணிகள் வழங்கப்பட்டுள்ளதாக அவா் குற்றம் சுமத்தினாா்.
இது ஒரு இனத்தை அழிப்பதற்கு எடுக்கப்படுகின்ற செயற்பாடுகளாகவே கருதவேண்டும் என மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.