அனுராதபுரம் மாவட்டத்தில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் என பாடசாலை சமூகத்தில் பலருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
60 இற்கும் அதிகமான பாடசாலை மாணவர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் தேஜன் சோமதிலக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஆசிரியர்கள் 10 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.