முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இரணைப்பாலை 5ஆம் வட்டாரப் பகுதியில் நேற்று, 8 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு பெறுமதியான நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளது.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள் இன்று புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
நேற்று இரவு 8 பேர் கொண்ட கும்பலொன்று வீட்டிற்குள் புகுந்துள்ளதுடன், அதில் 4 பேர் வீட்டின் வெளியில் நிற்க ஏனைய 4 பேர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து வீட்டில் இருந்த வயோதிப தாயார் மீது தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், அதில் குறித்த தாயார் காயமடைந்து புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, 21 வயது இளைஞரொருவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு அங்கிருந்து தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.