பல்பரிணாம அபிவிருத்தியின்போது நகரப் பகுதியில் நீர் வடிகாலமைப்பும் உள்வாங்கப்படும் – வேலணை பிரதேச தவிசாளர்

பல்பரிமாண அபிவிருத்தியினூடாக முன்னெடுக்கப்பட்டுவரும் வேலணை நகரப் பகுதியின் அபிவிருத்தியின்போது நீர் வடிகாலமைப்பு பொறிமுறை உள்வாங்கப்பட்டு மழை காலங்களில் ஏற்படும் வெள்ளத்தால் தமது வர்த்தாக நடவடிக்கைகளை பாதுகாத்து தருமாறு வேலணை நகரப்பகுதி வர்த்தக சங்கத்தினரின் விடுத்த கோரிக்கைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

வேலணை பிரதேசத்தின் நகர் பகுதியில் இன்றையதினம் நீர் வடிகாலமைப்பு தொடர்பான  நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் பிரதேச சபை தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி விடுத்திருந்த கோரிக்கையை அடுத்து வடக்கு மாகாணத்தின் நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் மற்றும் பிரதேச சபையின் துறைசார் அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் கள ஆய்வொன்றை முன்னெடுத்திருந்தனர். இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே தவிசாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பில் நகரப்பகுதி வர்த்தகர்கள் குறிப்பிடுகையில், “தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தியின் போது வீதி உயர்ந்துள்ளமையால் மழை வெள்ளம் தமது வர்த்தக நிலையங்களுக்குள் நுழைந்து வர்த்தக நடவடிக்கைகளை பெரிதும் பாதித்துள்ளது. இதனால் பெருமளவு பொருளாதார இழப்பகள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த வெள்ளத்தை ஒரு பொறிமுயையூடாக முன்னெடுத்து அதற்கான நீர் வடிகாலமைப்பை உருவாக்கி தமது வர்த்தக நடவடிக்கைகளை பாதுகாத்து தருமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர், ஆகியோருடன் எமது பிரதேசத்தின் தவிசாளரான கருணாகரகுருமூர்த்தியிடமும் கோரிக்கை விடுத்திருந்தோம்.

அந்தவகையில் இன்றையதினம் ( புதன்கிழமை) தவிசாளர் குறித்த அதிகாரிகளை அழைத்து வந்து நிலைமைகளை நேரில் பார்வையிட்டுள்ளதுடன் குறித்த வடிகாலமைப்பை ஏற்படுத்தவதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளார்.

அதேபோன்று நகரின் மத்திய பகுதியில் காணப்படும்’ பேருந்து தரிப்பு நிலையத்தால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருவதுடன் விபத்துக்களும் ஏற்படும் ஏதுநிலை காணப்படுகின்றது.

அந்தவகையில் குறித்த பேருந்து தரிப்பு நிலையத்தையும் கடந்த காலங்களில் இருந்த இடத்தில் அமைப்பதற்கான நடவடிக்கையையும் நகரின் அபிவிருத்தியின் போது கவனத்திற் கொண்டு விபத்துக்களையும் இடையூறுகளையும் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை செய்து தருமாறும் சுட்டிக்காட்டியுள்ளோம் என்றும் தெரிவித்தனர்.

இந்நிலையில் இது தொடர்டபில் கருத்து தெரிவித்திருந்த தவிசாளர் மேலும் கூறுகையில் – வர்த்தகர்களின் கோரிக்கைகள் நியாயமானவைதான். அபிவிருத்தி நடவடிக்கைகளின் போது மக்களுக்க இடையூறாக உள்ள பிரச்சினைகள் அனைகத்தம் கவனத்திற் கொள்ளப்படுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அதே போன்று பேருந்து தரிப்பிடம் அமைப்பதற்கான இடம் தொடர்பில் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை. அது தொடர்பில் தொடர்ந்தும் ஆலோசித்து வருகின்றோம் என்றும் தெரிவித்திருந்தார்.

முன்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட முயற்சி காரணமாக தீவகத்தின் மையப் பகுதியான வேலணையின் வங்களாவடி நகரப் பகுதியை பல்பரிணாம நகரமாக அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளுக்கள் உள்வாங்கப்பட்டிருந்தது.

சுபீட்சத்தின் நோக்கு திட்டத்திற்கமைய நாட்டில் 100 நகரங்களை பல்பரிமாண நகரத் திட்டமாக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் எண்ணக்கருவுக்கு அமைவாக பெருநகர அபிவிருத்தி அமைச்சு குறித்த செயற்றிட்டத்தை முன்னெடுத்துள்ளது.

இந்நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னெடுத்த முயற்சி காரணமாக யாழ் மாவட்டத்தில் குறித்த வேலணை நகரப்பகுதி தற்போது அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *