வடக்கு மாகாணத்தில் ஆரம்ப கல்வி பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட தீபாவளி விடுமுறைக்கான பதில் பாடசாலைகள் நாளை நடைபெறும் என வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
கடந்த 5 ஆம் திகதி தீபாவளி தினத்திற்காக வடமாகாண ஆரம்பக்கல்வி பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டது.
அத்துடன், இழந்த கல்வியைப் பெறுவதற்காக தற்போது இயங்கி வரும் தரங்களை கொண்ட இரண்டாம் நிலை பாடசாலைகளின் அதிபர்கள் விரும்பினால் ஆசிரியர்களின் ஒத்துழைப்போடு பாடசாலைகளை நடத்தலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.