2022 ஆம் நிதி ஆண்டுக்கான சமகால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட உரையை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச ஆரம்பித்துள்ளார்.
அதற்கு முன்னர் நிகழ்வை ஆரம்பிப்பதற்காக சபாநாயகர் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார்.
நாட்டில் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இனி நாட்டினுள் பயங்கரவாதத்திற்கு இடமில்லை எனவும், அரச நிறுவனங்களின் செலவீனங்கள் ஒவ்வொரு காலாண்டுக்கும் தனித் தனியாக ஒதுக்கப்படும் எனவும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்தார்.
இலங்கையின் 76ஆவது பாதீடான இது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் இரண்டாவது பாதீடாகும்.
பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் சனிக்கிழமை ஆரம்பமாகி, 7 நாட்களுக்கு இடம்பெறுவதுடன், இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு, நவம்பர் 22ஆம் திகதி இடம்பெறவுள்ளது.