
செலவீனங்கள் கட்டுப்படுத்துவதற்காக நிதி அமைச்சினால் வருடாந்தம் அரசாங்க திணைக்களங்களுக்கு வழங்கப்படும் நிதியை காலாண்டு விதத்தில் பகுதி பகுதியாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) இலங்கையின் 76 ஆவது வரவு செலவு திட்டத்தை முன்வைத்து, உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் எரிபொருளை 5 லீட்டரை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
அத்துடன், தொலைபேசி கட்டணம் குறைப்பு எனவும் பசில் தனது உரையில் தெரிவித்துள்ளார்.