மட்டக்களப்பில் கடந்த ஜீன் மாதம் 3 ஆம் திகதி போதைப்பொருள் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட விதுசன் என்ற இளைஞரின் மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ளதால் எதிர்வரும் இரண்டு
வாரங்களுக்குள் விசாரணை செய்த பொலிஸ் அதிகாரிகளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.
இதன் போது தோண்டி எடுக்கப்பட்ட விதுசனின் சடலம் மீது மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை
அறிக்கையின்படி விதுசனின் உடலில் அடிகாயங்கள் உள்ளன எனக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில்இ விதுசனை கைது செய்ய சென்ற பொலிஸ் அதிகாரிகளை எதிர்வரும் இரண்டு வாராங்களுக்குள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதேவேளை குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் 22 ஆம் திகதிமீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி மற்றில் அறிவித்தார்.
மட்டக்களப்பு செந்திபுரம் பகுதியைச் சேர்ந்த சந்திரன்விதுசன் எனும் இளைஞனை கடந்தபின் மாதம் 3 ஆம்
திகதிகஸ் போதைப் பொருள் வியாபாரம் செய்தார் எனக் கூறி இரவு 10.45 மணியளவில் கைது செய்யப்பட்ட
நிலையில் மறுநாள் காலை அவர் சடலமாக மீட்கப்பட்டடிருந்தார்.
அவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் இருக்கும் போதே மரணமடைந்தார். குறித்த மரணம் எஸ்
போதைப் பொருள் உள்கொண்டதாலேயே ஏற்பட்டதாக பொலிஸ் தரப்பு கூறியது.
அதே போல் மரணம் தொடர்பாக மட்டக்களப்பு வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையிலும் குறித்த இளைஞனின் மரணம் கஸ்போதைப்பொருள் உள்கொண்டமையாலே ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் பொலிஸார் அடித்ததாலேயே தனது
மகன் மரணம் அடைந்திருக்கலாம் என நீதிமன்றத்தில் சந்தேகம் எழுப்பப்பட்டதால் புதைக்கப்பட்ட விதுசனின் உடலை மீண்டும் தோண்டி எடுத்து இலங்கையிலேயே பிரேத பரிசோதனையில் விசேட நிபுணத்துவம் வாய்ந்த பேராதனைப் பல்கலைக்கழகத்தினுடைய பேராசிரியர் முன்னிலையில் மீளவும் பிரேத பரிசோதனை செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதன் அடிப்படையில் தற்போது குறித்த பிரேதப் பரிசோதனை அறிக்கை நீதிமன்றத்துக்கு கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அதில் ஏற்கனவே மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கைக்கு முற்றிலும் மாறுபட்ட அறிக்கையே வெளியாகியுள்ளது.
அதாவது மரணமடைந்த விதுசன் உடலில் அடித்து துன்புறுத்தப்பட்டதற்கான பல அடையாளங்கள் காணப்படுகின்றமையுடன் குறித்த இளைஞனின் மரணம் அடித்து சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாலேயே நிகழ்ந்திருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
மரணமடைந்த இளைஞர் தொடர்பாக உடல் கூற்றுப் பரிசோதனை அறிக்கைகளின் படி குறித்த இளைஞனை பொலிஸார் இரவு முழுவதும் அடித்து சித்திரவதை செய்தே கொலை செய்துள்ளனர் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாம் இளைஞனின் கைதுடன் சம்பந்தப்பட்ட பொலிஸ்மாரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.