பொலனறுவை, கதுருவெல பகுதியில் இருந்து அரச பேரூந்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, காத்தான்குடி டெலிகொம் சந்தியில் வைத்து ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அபீன் என்றழைக்கப்படும் போதைப்பொருளை கடத்திய குடும்பஸ்தரே, நேற்று இரவு காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா தலைமையில் சென்ற பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கதுருவெல பகுதியை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க, குறித்த நபரிடம் இருந்து 100 கிராம் அடங்கிய அபீன் போதைப்பொருள் மீட்கப்பட்டன.
குறித்த நபரை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பட்டிப்பளை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு பிக்கு ஒருவர் போராட்டம்!