நாளை நடத்த தீர்மானிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டங்களுக்கு 5 ஆம் இலக்க புதுக்கடை நீதிவான் நீதிமன்றம், 1 ஆம், 2 ஆம் இலக்க மஹர நீதிவான் நீதிமன்றம், கடுவலை மற்றும் ஹோமாகம நீதிவான் நீதிமன்றங்கள் தடை விதித்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் தொடர்பில் காவல்துறையினர் முன்வைத்த கோரிக்கையைக் கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் நிராகரித்தது.
கொழும்பில் நாளை ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியினர் தீர்மானித்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களுக்கமைய, குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்குமாறு உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு வாழைத்தோட்டம் காவல்துறையினர் நீதிமன்றிடம் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.
எனினும், குறித்த கோரிக்கையைக் கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.
அரசு ஆட்சிக்கு வரும்போது பலமாய் இருந்த அரச ஊழியர்கள் இன்று சுமையாகி விட்டனர்! சபா குகதாஸ்