வவுனியா மாவட்டத்தின் இனப்பரம்பலை மாற்ற எடுக்கும் முயற்சிக்கெதிராக வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று மாபெரும் போராட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதில் பல புலனாய்வாளர்கள் தமது தொலைபேசியினாலும், புகைப்பட கருவியினாலும் போராட்டம் நடாத்தியவர்களை புகைப்படம் பிடிப்பதுடன் ஊடகவியலாளர்களையும் சுற்றி புகைப்படம் பிடித்துள்ளனர்.
இதனால் அப்பகுதி மக்கள் அச்ச நிலையில் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்ததோடு, புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல் தற்போதும் குறையவில்லை என போராட்டகாரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
திட்டமிட்ட குடியேற்றத்திற்கு எதிரான மக்கள் போராட்ட குழு மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளின் ஏற்பாட்டில் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
