கிளிநொச்சி மத்திய கல்லூரி முன்பாக இடம்பெற்ற வீதி விபத்தில் மாணவி இன்று உயிரிழந்தமையைக் கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 8 மணியளவில் கிளிநொச்சி மத்திய கல்லூரி முன்பாக இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில், பாதசாரி கடவையை கடக்க முற்பட்ட பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்ததுடன், ஒருவர் படுகாயமடைந்தார்.
இந்த சம்பவத்தை கண்டித்து இன்று சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கம் பெற்றோர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டு கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
குறித்த போராட்டத்தில் வீதி ஒழுங்குகளை கடைப்பிடிக்க வேண்டிய பொலிஸார் உரிய காலத்தில் கடமையில் இருப்பதில்லை என்றும், வாகன சாரதிகள் விழிப்புணர்வு இன்றி வாகனங்களைச் செலுத்துதல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.



போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை புலனாய்வாளர்கள் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தல்!