புளிச்சாக்குளம் பகுதியில் பெரிய குளம் புனரமைப்பு!

முந்தல் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட உடைப்பெடுக்கும் நிலையிலுள்ள புளிச்சாக்குளம் குளம் இன்று புனரமைக்கப்பட்டது.

முந்தல் பிரதேச செயலாளர் விஜானி வசந்திகாவின் ஆலோசனையில், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு, கடற்படையினர், வடமேல் மாகாண நீர்ப்பாசன திணைக்களம், உடப்பு பொலிஸார் ஆகியோருடன் புளிச்சாக்குளம் பிரதேச விவசாயிகளும் இணைந்து குறித்த குளத்திற்கு மணல் மூடைகளை வைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

புத்தளத்தில் சில நாட்களாக பெய்த கடும் மழை காரணமாக குறித்த பகுதி வெள்ளத்தால் மூழ்கிய நிலையில், புளிச்சாக்குளம் பகுதியிலுள்ள பெரிய குளம் உடைப்பெடுக்கும் நிலையில் காணப்பட்டது.

இதனையடுத்து, உடனடியாக செயற்பட்ட பிரதேச செயலாளர், அதிகாரிகள் மற்றும் படையினரின் ஆகியோரின் உதவிகளைப் பெற்று, குறித்த குளத்தை இன்று மாலை புனரமைக்க நடவடிக்கைகளை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கற்பிட்டியில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *