கொரோனா தொற்றுநோய் காரணமாக 20 மாத தடைக்குப் பின்னர் இந்தியா தனது எல்லைகளை வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக மீண்டும் திறந்துள்ளது.
இலங்கை பயணிகளுக்கான வழமையான சுற்றுலா விசாக்கள் வழங்கும் செயற்பாடுகளை இன்று முதல் இந்தியா ஆரம்பித்துள்ளதாக கொழும்பில் அமைந்துள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான தகவலை இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
‘இந்தியா அழைக்கிறது’ இலங்கை பயணிகளுக்கான வழமையான சுற்றுலா விசாக்கள் இன்று முதல் வழங்கப்படும்.
வருகைதந்து இந்தியாவின் அழகையும் பன்முகத்தன்மையையும் ரசித்து மகிழுங்கள் என்று இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது முகநூல் பதிவில் கூறியுள்ளது.
யாழில் தாராளமான எரிபொருள் கையிருப்பில்; மக்கள் முண்டியடிப்பதை தவிர்க்கவும்! அரச அதிபர் தெரிவிப்பு