முல்லைத்தீவிலிருந்து, திருகோணமலைக்கு ஒரு கிலோ 800 கிராம் கேரளா கஞ்சா பொதியை பேருந்தில் கொண்டு சென்ற நபரை இம்மாதம் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் இன்று உத்தரவிட்டார்.
முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அனுமதிப்பத்திரமின்றி ஒரு கிலோவும் 800 மில்லி கிராம் கஞ்சா பொதியை பேருந்தில் கொண்டு செல்வதாக, புல்மோட்டை போதைப் பொருள் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை பொலிஸார் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்திய போதே, விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
நாளை முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை பொதுமக்கள் ஒன்றுகூடுதல் மற்றும் கூட்டங்களுக்கு தடை!