முந்தல் பிரதேச செயலகத்தின் உடப்பு கரையோரப்பகுதியில் தொடர்ச்சியாக கடல் அரிப்புக்குள்ளாகி வருகின்றது.
இந்தக் கரையோரப்பகுதியில் சுமார் 150ற்கும் அதிகமான மீனவ குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றதுடன் கடலரிப்பால் இவர்களின் வாழ்வாதார செயற்பாடுகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
தற்போது, மீனவ மக்களின் படகுகள் கூட கரையோரங்களில் வைக்கமுடியாத நிலைமை காணப்படுகின்றன.
அத்துடன் கடலரிப்பை தடுப்பதற்காக கற்கல் போடப்பட்டுள்ள போதிலும், கடலரிப்பின் தீவிரம் இதுவரையிலும் குறையவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், கடலரிப்பால் தற்போது தமது குடியிருப்புகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக மக்கள் கவலைத் தெரிவிக்கின்றனர்.
