பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.
அக்குழுவின் தலைவரும் பாதுகாப்புச் செயலாளருமான ஜெனரல் (ஓய்வுநிலை) கமல் குணரத்ன, அறிக்கையின் முதல் பிரதியை ஜனாதிபதியிடம் கையளித்தார்.
தேசிய பாதுகாப்பின் அம்சங்கள் தொடர்பாகப் பல்வேறு தரப்பினரிடையே நிலவும் கருத்தைக் கவனத்திற்கொண்டு, 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தை மீளாய்வு செய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவிற்கு பரிந்துரைகளை வழங்குவதற்காக இந்த நிபுணர் குழு, கடந்த ஜூன் 24 ஆம் திகதி நியமிக்கப்பட்டது.
பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
எத்தகைய அழுத்தங்களுக்கு மத்தியிலும் திட்டமிட்டபடி போராட்டம் நடத்தப்படும்! எதிர்க்கட்சி அறிவிப்பு