வவுனியாவில் முன்னணி விளையாட்டு கழகமான ஜங்ஸ்டார் விளையாட்டுக்கழகம் வருடந்தோறும் ஏற்பாடு செய்யும் இரத்ததான முகாம் எதிர்வரும் 18 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
குறித்த இரத்ததான நிகழ்வு, வவுனியா வைரவபுளியங்குளம் வைரவர்கோவில் வீதியில் அமைந்துள்ள விளையாட்டு கழக கட்டிடத்தில் காலை 8 மணிமுதல் மாலை 4 மணிவரை இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில்,கழக உறுப்பினர்களுடன் ஏனைய விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களையும் கலந்துகொண்டு இரத்ததானம் வழங்குமாறு கழகத்தின் தலைவர் மு. ஜீவன் அழைப்பு விடுத்துள்ளார்