நாடளாவிய ரீதியில் சமையல் எரிவாயுவின் விநியோகம், இன்று முதல் வழமை போன்று இடம்பெறும் என்று லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்ஹ தெரிவித்துள்ளார்.
தற்போது மேல் மாகாணத்தில் சமையல் எரிவாயுவின் விநியோகம் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், எரிவாயு உற்பத்தி நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.
எரிவாயு உற்பத்தி நடவடிக்கைகள் 4 நாட்கள் தடைப்பட்டதன் காரணமாகவே சமையல் எரிவாயுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.
சந்தையில் எரிவாயு விலை தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்பு சாத்தியம் என்பவற்றை மையமாக கொண்டு ‘கேஸ் மாபியா’க்களின் செயற்பாடுகளும் அதிகரித்து செல்கின்றன.
எனவே இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் பொது மக்கள் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையிடம் கோரிக்கை விடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.