
இருபதுக்கு 20 உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை எட்டு விக்கெற்றுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அவுஸ்திரேலிய அணி வெற்றியைத் தனதாக்கிய சந்தோசத்தில் அணிவீரர்கள் தமது காலணியில் குளிர்பானத்தை ஊற்றிப் பருகியுள்ளனர்.
இவ்வாறு காலணியில் குளிர்பானம் ஊற்றிப் பருகிய புகைப்படங்களும் காணொளிகளும் சமூக வலைத் தளங்களிலும் வைரலாகி வருகின்றன.
வெற்றிக்குப் பின்னர் அவுஸ்திரேலிய அணியினர் தங்கள் ஓய்வறையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது அணியின் விக்கெட் காப்பாளர் மேத்யூ வேட் மற்றும் சகலதுறை வீரர் மார்கஸ் ஸ்டொய்னிஸ் இருவரும் தமது காலணியில் குளிர்பான ஊற்றிப் பருகியுள்ளனர்.
