
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை, ஜனாதிபதி செயலணிக்குழுவின் தலைவராக நியமித்தமை முட்டாள்தனமான செயல் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா (Dilan Perera) தெரிவித்துள்ளார்.
பதுளை எட்டம்பிட்டிய பிரதேசத்தில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஞானசார தேரர், குழு ஒன்றின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இது முற்றிலும் முட்டாள்தனமான செயல். ஞானசார தேரர் மீது தவறுகள் இருக்கலாம் அந்த தவறுகளுடன் அவர் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டது பொருத்தமற்றது.
ஞானசார தேரரிடம் சில உண்மைகளும் இருக்கலாம். எனினும் குழு ஒன்றின் தலைவர் பதவிக்கு அவருக்கு தகுதியில்லை எனவும் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
