அரச பாடசாலைகளில் இதுவரை திறக்கப்படாத தரம் 6 முதல் தரம் 9 வரையான வகுப்புக்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் 22 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதனை ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இன்று (16) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.