கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் முன்னெடுத்து வருகின்ற நிலையில்இ வீதித் தடைகளை பொலிஸார் அமைத்துள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களின் பஸ்கள் நுழைவதைத் தடுக்க வீதித் தடைகளை விதித்த பொலிஸார்இ ஆதரவாளர்கள் பல பகுதிகளிலிருந்தும் தலைநகருக்கு வருவார்கள் என எதிர்பார்க்கின்றனர்.
இதன் காரணமாகவே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள அறிவித்தலுக்கு இணங்கஇ அவர்களின் வருகையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன்இ பல பிரதேசங்களைச் சேர்ந்த ஆதரவாளர்கள் பொலிஸாரினால் மாகாண எல்லைகளில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் ஓர் அங்கமாக புத்தளம் – அனுராதபுரம் பிரதான வீதியில்இ கலா ஓயா பாலத்திற்கு அருகில் பஸ்கள் முன்னோக்கிச் செல்வதைத் தடுக்கும் வகையில் பொலிஸார் வீதித் தடைகளை (ஸ்பைக் கீற்றுகள்) அமைத்துள்ளனர்.
இதேவேளைஇ ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தை தடுக்க உத்தரவிடுமாறு கோரி பொலிஸார் நேற்று பல நீதிமன்றங்களில் கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.