
மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்தாபகத் தலைவரான ரோஹன விஜேவீர மற்றும் ஏனைய கொல்லப்பட்ட உறுப்பினர்களின் ஞாபகார்த்தமாக அனுஷ்டிக்கப்படும்
‘கார்த்திகை வீரர்கள் தினம்’ யாழ்ப்பாணத்தில் கடந்த 13 ஆம் திகதி கடைப்பிடிக்கப்பட்டது.
கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளரும், மத்திய குழு உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில், யாழ்ப்பாணத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் பிற்பகல் 2.30 மணியளவில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் இந்த நினைவுதினம் இடம்பெற்றது இதுவே முதற்தடவையாகும்.படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் தீபங்கள் ஏற்றப்பட்டதுடன் மலரஞ்சலியும் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது அக்கட்சி உறுப்பினர்கள் சுகாதார நடைமுறைப்படி நினைவேந்தலில் கலந்து கொண்டனர்.