பாலாவி, மதுரங்குளி, புளிச்சாக்குளம் ஆகிய பகுதிகளிலேயே வழமைக்கு மாறாக இவ்வாறு வீதித் தடைகள் போடப்பட்டுள்ளதுடன், ஆயுதம் ஏந்திய பொலிஸாரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான வாகனங்கள் பயணிப்பதாக கிடைத்த தகவலையடுத்து, இவ்வாறு வீதிச் சோதனைச் சாவடிகள் போடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும், ஐக்கிய மக்கள் சக்தி கொழிம்பில் இன்றுபாரிய எதிர்ப்பு பேரணிக்கு அழைப்பு விடுத்த நிலையிலேயே, இவ்வாறு வீதிச் சோதனைச் சாவடிகள் போடப்பட்டுள்ளதாக மக்கள் குறிப்பிடுகின்றனர்.
