
கொழும்பு, ஓக 29
நாட்டில் பணவீக்கம் தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதன்படி, இலங்கையில் கடந்த ஜூன் மாதம் 58 தசம் 9 வீதமாக காணப்பட்ட பணவீக்கம் ஜூலை மாதம் 66 தசம் 7 வீதமாக அதிகரித்துள்ளது.
உணவு மற்றும் உணவு அல்லாத பொருட்களின் விலைகள் மாதாந்தம் அதிகரித்து வருவதன் காரணம் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, கடந்த ஜூன் மாதம் 75 தசம் 8 வீதமாக காணப்பட்ட வருடாந்த உணவுப் பணவீக்கம் ஜூலை மாதம் 82 தசம் 5 வீதமாக அதிகரித்துள்ளது.